புதுக்கடை: செக்யூரிட்டிக்கு வெட்டு; 3  பேர் மீது  வழக்கு

84பார்த்தது
புதுக்கடை: செக்யூரிட்டிக்கு வெட்டு; 3  பேர் மீது  வழக்கு
கிள்ளியூர் பகுதி வெட்டுவிளையை சேர்ந்தவர் பத்மநாபன் (62). இவர் குமரி ஐஎஸ்ஆர்ஓ அலுவலகத்தில் செக்யூரிட்டியாக உள்ளார். இவருக்கு வேங்கோடு பகுதி குற்றிங்கவிளை பகுதியில் வாழைத்தோட்டம் உள்ளது. 

நேற்று (ஜனவரி 9) மாலை தோட்டத்தை பார்வையிட சென்ற போது அதே பகுதியை சேர்ந்த தோமஸ் மகன்கள் அனிஷ், அனு, வினு ஆகியோர் பத்மநாபனை அந்த வழியாக செல்லக் கூடாது என தடுத்து, வெட்டி காயப்படுத்தியுள்ளனர். காயமடைந்த பத்மநாபன் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் அனிஷ், அனு, வினு ஆகிய 3 பேர் மீது புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி