மார்த்தாண்டம் பணிமனையில் இருந்து தடம் எண் 87. A, C சர்வீஸ் பேருந்து மார்த்தாண்டத்தில் இருந்து புதுக்கடை, தேங்காய்பட்டணம், முள்ளூர்துறை, ராமன்துறை வழியாக இனயத்திற்கு சுமார் 40 ஆண்டுகாலமாக இயக்கப்பட்டு வந்தது. இப்பேருந்து தற்போது இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது.
இப்பேருந்து அரசு அறிவித்த மகளிர் கட்டணமில்லா பேருந்து ஆகும். நிறுத்தப்பட்ட மேற்படி பேருந்தை மீண்டும் உடனடியாக அதே வழிதடத்தில் இயக்க இன்று 27-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரை தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ, தமிழக மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். உடனடி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.