புதுக்கடை அருகே உள்ள இனயம் ஹெலன் நகரை சேர்ந்தவர் எழியன் (46). இவர் ஆட்டோ டிரைவர். நேற்று ஆட்டோவில் அவருடைய அண்ணன் ஜெரால்டின் மஜாலா (54) உடன் மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.
கல்லுத்தொட்டி என்ற பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது, எதிரே நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்ட நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று திடீரென ஆட்டோ மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் எழியன் மற்றும் ஜெரால்டின் மஜாலாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் எழியன் இன்று (23-ம் தேதி) உயிரிழந்தார்.
இது குறித்து ஜெரால்டின் மஜாலா மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கார் டிரைவர் நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்த யோசுவா (31) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.