திங்கள்நகர் அருகே தலக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத். இவருக்கு அஜிஸ் (22) அஜய்குமார் (20) என்ற மகன்கள் உள்ளனர். கடந்த 25ஆம் தேதி அண்ணன் தம்பி இருவரும் குளச்சல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்மஸ் குடிலைப் பார்ப்பதற்காக பைக்கில் சென்றனர்.
அப்போது மண்டைக்காடு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அண்ணன் தம்பி இருவரும் தூக்கிவீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் மீட்டு அஜய்குமாரை குளச்சலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும், அஜீசை நாகர்கோவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் குளச்சல் போலீசார் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் தொடர்பாக நேற்று (26-ம் தேதி) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.