குமரி: கடற்கரை கிராமங்களில் விஜய் வசந்த் நன்றி அறிவிப்பு

1பார்த்தது
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் வசந்த் இன்று கடற்கரை கிராமங்களில் திறந்த வாகனத்தில் நன்றி தெரிவித்தார். குறும்பனை கடற்கரை கிராமத்தில் இருந்து வாக்காளர்களுக்கு நன்றி சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் தொடங்கி வைத்தார். இந்த நன்றி அறிவிப்பு குறும்பனையில் தொடங்கி வாணியகுடி, குளச்சல், கொட்டில்பாடு, புதூர், அழிக்கால் உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்தது.
நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், மாநில மீனவர் அணி தலைவர் ஜோர்தான், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி