குளச்சல் எஸ்ஐ தனுஷ் லியோன் நேற்று குற்றவழக்குகளின் பதிவேட்டை ஆய்வு செய்தார். அப்போது அதே பகுதி பனவிளையைச் சேர்ந்த போட்டோகிராபரான ராதாகிருஷ்ணன் (48) என்பவர் மீது 8 வழக்குகள் இருந்ததால் அது தொடர்பாக விசாரணை நடத்த அவருடைய வீட்டிற்குச் சென்றார்.
அப்போது வீட்டிலிருந்த ராதாகிருஷ்ணன் எஸ்ஐயிடம் என்னையே விசாரணை நடத்தி கைது செய்ய வந்தாயா? என கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் வீட்டில் வைத்திருந்த நான்கு அடி நீளமுள்ள ஈட்டியால் எஸ்ஐ தனுஷ் லியோனை குத்தியுள்ளார். எஸ்ஐ குத்திலிருந்து சாதுர்யமாக தப்பினார். இந்தச் சம்பவம் குறித்து எஸ்ஐ தனுஷ் லியோன் குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராதாகிருஷ்ணனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.