குளச்சல் அருகே வாணியக்குடி வியாகப்பர் தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (46) நேற்று மாலையில் மனைவி, மகன் மகளுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். பனவிளை பகுதி சாலையில் கோவில் அருகே சென்றபோது எதிரே வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜெய்சன் என்பவர் ஓட்டிவந்த பைக், ரஞ்சித் குமார் பைக்கில் மோதியது.
இந்த விபத்தில் ரஞ்சித் குமார், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் படுகாயம் அடைந்தனர். ஜெய்சன் காயமின்றி தப்பினார். அக்கம்பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குளச்சலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து ரஞ்சித் குமார் அளித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.