குளச்சல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 250 கிலோகிராம் எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்தனர். 3 பேரை கைது செய்தனர்.
கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கஞ்சா விநியோகத்தில் ஈடுபட்ட முக்கியமான நபர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதில் பெரியகாடு, தாம்சன் தெருவை சேர்ந்த பால முரளி என்பவரின் மகன் டேனியல் (25), திருவள்ளூர் மாவட்டம், காளையார் மேடு, அம்பேத்கர் தெருவை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் அர்ஜூன் (24), திருவள்ளூர் மாவட்டம், பத்திரவேடு, மாதா கோவில் தெருவை சேர்ந்த முரளி என்பவரின் மகன் ஹேம்நாத் (20), ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.