இயேசு கிறிஸ்துவின் பிறப்பு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.
கருங்கல் அருகே கருமாவிளை பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் குமரி மாவட்ட ஐக்கிய இளைஞர் பேரவை சார்பில் கிருஸ்துமஸ் தாத்தா போட்டி மற்றும் பேரணி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் 14 வது கிருஸ்துமஸ் தாத்தா போட்டி மற்றும் பேரணி நேற்று (22-ம் தேதி) மாலையில் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் கலந்துகொண்டனர். வித விதமான வாகனங்களிலும், மாட்டு வண்டிகளிலும் பேரணியாக சென்றனர். ஆடல். பாடல் என உற்சாகமாக பல்வேறு கிராமங்களுக்கு இந்த பேரணி சென்றது.