இரணியல்: கிடப்பில் போடப்பட்ட சாலை பணியால் பாதிப்பு

70பார்த்தது
இரணியல்: கிடப்பில் போடப்பட்ட சாலை பணியால் பாதிப்பு
இரணியல் அருகே உள்ள மட விளாகம் சந்திப்பு முதல் குருந்தன்கோடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட்டு குடிநீர் திட்ட மறுசீரமைப்பு பணிகள் நடக்கிறது. 

இதற்காக குழிகள் தோண்டப்பட்டு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. அதன் பின்னர் சாலைகள் சீரமைப்பு பணி கடந்த மாதம் தொடங்கியது. இதற்காக ரோட்டோரம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக பண்டாரக்குளம் கரையில் நின்ற மின் கம்பம் ஒன்று பலத்த சேதம் அடைந்து மின்தடை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதே போன்று மற்றொரு பகுதியில் குடிநீர் குழாயில் வீட்டு குடிநீர் இணைப்பு பைப்புகள் சேதம் அடைந்துள்ளதால் கடந்த சில வாரங்களாக சாலை பணிகள் நடக்கவில்லை. ஆனால் குடிநீர் ரோட்டில் ஆராய் ஓடுகிறது. 

நெருக்கடி மிகுந்த இந்த சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு கிடப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பள்ளி கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளத்தை உடனடியாக சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி