இண்டியா கூட்டணி வெற்றி குளச்சலில் மீனவர் காங். கொண்டாட்டம்

64பார்த்தது
இண்டியா கூட்டணி வெற்றி குளச்சலில் மீனவர் காங். கொண்டாட்டம்
கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில் காங். சார்பில் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் கத்பர்ட் தாரகை ஆகியோரின் வெற்றியை கொண்டாடும் வகையில் குமரி கிழக்கு மாவட்ட மீனவர் காங். சார்பில் குளச்சல் பீச் சந்திப்பில் மீனவர் காங்கிரசார் பட்டாசுகள் வெடித்தும் மற்றும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட மீனவர் காங். தலைவர் ஸ்டார்வின் மற்றும் மீனவர் காங். செயல்தலைவர் லாலின் ஆகியோர் தலைமை வகித்தனர், குளச்சல் நகர காங் தலைவர் சந்திரசேகர், காங். மூத்த தலைவர் பிரான்சிஸ், செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மீனவ காங் மாவட்ட பொருளாளர் மோகன், பிராங்கிளின், மாவட்ட துணை தலைவர் தர்மராஜ், பென்சிகர், தி. மு. க நகர செயலாளர் நாகூர் கான், நகர்மன்ற தலைவர் நசீர், தி. மு. க மீனவரணி மாவட்ட அவைத்தலைவர் ஆண்டனிராஜ், கவுன்சிலர் பிரிட்டோ, மணி, ராபின், கடிகை ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இந்நிகழ்ச்சியில் அந்திரியாஸ், ஆரோக்கியராஜ், ஷாபி, ராக்சன், அந்தோணிதாசன், சிவாஜி, சந்தோ, சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி