கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் திங்கள்நகர் டிப்போ முன்புறம் தமிழ தி. மு. க அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் நாகர்கோவில் மண்டல வணிக துணை மேலாளரை பணி இடம் மாற்ற கோரியும் அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் விஜயகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள் நகர் டிப்போ முன்பு நடைபெற்றது. கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு சிறப்பு பேருரை ஆற்றினார். திங்கள் நகர் டிப்போ செயலாளர் ராஜன் வரவேற்புரையாற்றினார்,
அண்ணா தொழிற்சங்க செயலாளர் வைகுண்ட மணி, மண்டலத் தலைவர் சந்தனராஜ், மண்டல பொருளாளர் ரமேஷ், மண்டல விபத்து பிரிவு செயலாளர் முருகன், டாஸ்மாக் கிழக்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன், திங்கள் நகர் டிப்போ தலைவர் ஹரிகரன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சிவா செல்வராஜன், மாவட்ட அதிமுக அவை தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட பொருளாளர் திலக், சந்துரு, ஒன்றிய கழகச் செயலாளர்கள் அசோக் குமார், ராதாகிருஷ்ணன், நகரச் செயலாளர் ஆண்ட்றோஸ், ஆறுமுகராஜா, திங்கள் நகர் பேரூர் செயலாளர் ராஜேந்திரன்
தலக்குளம் குமார், வழக்கறிஞர்கள் சந்திரசேகர், அம்மாஆன்றணி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் திங்கள் நகர் டிப்போ பொருளாளர் அலெக்ஸாண்டர் நன்றி கூறினார்.