முன்விரோதத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை பரபரப்பு

65பார்த்தது
முன்விரோதத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை பரபரப்பு
புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் சேர்ந்தவர்  மரிய டேவிட் (56) அந்த பகுதியில் ஆட்டோ ஒட்டி வருகிறார்.   இவருக்கும் ஐரேனிபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இன்று இவரை ஆட்டோ வாடகைக்கு வருமாறு போனில்  அழைத்து வாலிபர்கள் கூட்டி சென்றனர்.

     இந்த ஆட்டோ அரசமூடு பகுதி நெடுமானிகுளம் வரும்போது அங்கே இவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு தொடர்ந்து இந்த வாலிபர்கள் மரிய டேவிட்டை சரமாரியாக வெட்டியுள்ளனர். படுகாயம் அடைந்த இவர் ரத்த காயத்துடன் ஆட்டோவில் ஏறி, தப்புவதற்காக  சிறிது தூரம் ஆட்டோவை  ஓட்டிச் சென்றுள்ளார்.   பின்னர் அங்கிருந்து போன் மூலம் தன்னை வெட்டியதாக உறவினர்களிடம் தெரிவித்தார்.

     இதைத்தொடர்ந்து இவர் திடீரென மயங்கி  விழுந்துள்ளார். இது தொடர்பான தகவலின் பேரில்  புதுக்கடை போலீசார் சம்பவ இடம் சென்று டேவிட்டை  ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றுள்ளனர். அங்கு ஆஸ்பத்திரி செல்லும் வழியில் அவர் இறந்துள்ளார். இதையடுத்து குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் உடல் வைக்கப்பட்டுள்ளது.  

   இது தொடர்பாக கருங்கல் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

     இது சம்மந்தமாக புதுக்கடை போலீசார் முதற்கட்டமாக 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி