கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

69பார்த்தது
கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்டத்தில் நீர் நிலைகள் தூர்வாருதல், மராமத்து பணிகளை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட விவசாய நல பணிகளை கிடப்பில் போடப்பட்டுள்ளதை கண்டித்தும், அரசு தேர்தல் அறிக்கையில் கொடுத்த 100 நாள் வேலை திட்டத்திற்கு ஊதியம் உயர்த்தி வழங்குதல் உள்ளிட்டவை செய்து கொடுக்காத, மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாய பொதுமக்கள் கலந்து கொண்டனர். சின்னத்துரை எம் எல் ஏ கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி