டெம்போ கதவு திடீரென திறந்ததால் விபத்து; வாலிபர் சாவு

83பார்த்தது
டெம்போ கதவு திடீரென திறந்ததால் விபத்து; வாலிபர் சாவு
திங்கள்நகர் அருகே தலக்குளம் புதுக்குளம் பகுதியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ண பிரசாத் (47). மணல், ஜல்லி, கம்பி போன்ற கட்டுமான பொருட்களை விற்பனை செய்து வந்தார். சம்பவத்தன்று பைக்கில் திருநயினார்குறிச்சிக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
கல்படி பகுதியில் வந்தபோது, எதிரே வேகமாக வந்த டெம்போவின் முன்பக்க கதவு திடீரென திறந்து கோபால கிருஷ்ண பிரசாத் மீது மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தவர் படுகாயம் அடைந்தார்.

உடனே அந்த பகுதியினர் அவரை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதைத்தொடர்ந்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று கோபால கிருஷ்ண பிரசாத் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி