கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே பெரும்செல்வவிளை குலாளர் தெருவை சேர்ந்தவர் ராஜன் (40). கூலித்தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மது அருந்திவிட்டு மனைவி ஸ்ரீஜாவுடன்(35)அடிக்கடி சண்டை போடுவாராம். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சண்டையில் ராஜன் மனைவியை அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஸ்ரீஜா கணவரிடம் கோபித்துக்கொண்டு குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். தாய் வீட்டில் 4 நாட்கள் தங்கிவிட்டு சம்பவத்தன்று ஸ்ரீஜா வீடு திரும்பினார். அப்போது ராஜன் ஸ்ரீஜாவிடம் பணம் கேட்டு மீண்டும் அடித்து உதைத்தார். இதில் படுகாயமடைந்த ஸ்ரீஜா ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் ராஜன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.