ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் செயின் பறிப்பு 2 பெண்கள் கைது

67பார்த்தது
ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் செயின் பறிப்பு 2 பெண்கள் கைது
கன்னியாகுமரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து களியக்காவிளக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் உள்ள நிறுத்தத்தில் நின்ற போது இரண்டு பெண்கள் கைக்குழந்தைகளுடன் பஸ்ஸில் ஏறினார்கள்.   கொட்டாரம் அரசு மருத்துவமனை அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது ஒரு பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலி வழியில் பஸ்ஸில் கைக்குழந்தையுடன் ஏறிய பெண்கள்  பறித்ததாக தெரிகிறது.

      இதை பார்த்த அந்த பெண் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார்.   உடனே நடத்துனர் அந்த இடத்திலேயே விசில் அடித்து பஸ்சை  நிறுத்தினார். தொடர்ந்து கன்னியாகுமரி  போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்களை  அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அந்த ரெண்டு பெண்களும் தூத்துக்குடி சேர்ந்த பவானி (27) மற்றும் சரண்யா ( 28)என்பது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி