நாகர்கோவில், கோட்டார் வாகையடி வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகதாஸ் (வயது 40). இவர் குஞ்சன்விளையில் உள்ள தனியார் தண்ணீர் கம்பெனியில்
வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சொர்ண பிரியா (25). இவர் சுய உதவி குழுவைச் சேர்ந்த குமார் மனைவி சத்யாவுக்கு சுய உதவி குழுவில் 15 ஆயிரம் ரூபாய் வாங்கி கொடுப்பதற்காக சத்யாவை அழைத்து சென்றுள்ளார்.
இதனை கேள்விப்பட்ட குமார் சொர்ண பிரியாவிடம் சென்று என்னிடம் கேட்காமல் எப்படி என் மனைவியை அழைத்து செல்லலாம் என்று கூறி தகாத வார்த்தை பேசி அருகில் கிடந்த கம்பியால் சொர்ணபிரியாவின் முகத்தில் தாக்கியுள்ளார். இதில் தலையில் காயம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குமாரை கைது செய்தனர்.