கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

70பார்த்தது
கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
புதுக்கடை அருகே  முஞ்சிறை பகுதி சாத்தனூர் என்ற இடத்தை சேர்ந்தவர் நேசமணி (37)  கூலித் தொழிலாளியான  இவர் கடந்த15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். பின்னர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக  தனிமையில் வசித்து வந்தார்.  

     சம்பவ தினம்  ஆனந்தமங்கலம் அருகே ஒரு வீட்டில் கட்டிட தொழில் செய்து கொண்டிருக்கும் போது தவறி விழுந்துள்ளார். இதில் தலை உட்பட பல இடங்களில்  படுகாயம் அடைந்தவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்காக அனுமதித்தனர்.   

     அங்கு சிகிட்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் நேசமணி உயிரிழந்தார்.   இது குறித்து  மேரி சுதா என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி