நித்திரவிளை அருகே வாவறையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளது. இதன் 21வது ஆண்டுவிழா 2 நாட்கள் நடந்தது. முதல் நாள் காலையில் முன்னாள் மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் செல்லசாமி தீபம் ஏற்றி தொடக்கி வைத்தார். தொடர்ந்து ஓட்டம், கபடி, கைப்பந்து, பேச்சு, பைக் ரேஸ், பாடல், மாறுவேடம், போட்டி நடனம் போன்ற போட்டிகள் நடந்தது. 2ம் நாள் நேற்று 31ம் தேதி காலை மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற்றது. மேலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வடம் இழுத்தல் போட்டிகள் நடைபெற்றது.
மாலையில் நடந்த ஆண்டுவிழா கூட்டத்தில் கிளப் தலைவர் அனிஷ் தலைமை வகித்தார். கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாபு சிறப்புரை ஆற்றினார். நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் லாரன்ஸ் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் தேசிய அளவில் பள்ளிகளுக்குகிடையேயான ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்ட ஜோஸ்னா என்பவருக்கும், தேசிய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மும்முறை தாண்டுதல் போட்டியில் கலந்துகொண்ட டோனி என்பவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.