கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த டெம்போ சிறைபிடிப்பு

1513பார்த்தது
குமரி மாவட்டம் புதுக்கடை -  கருங்கல் சாலையில்  நேற்று (08.06.2024) மாலை கேரள பதிவு கொண்ட கூண்டு கட்டிய டெம்போ ஒன்று துர்நாற்றத்துடன் சென்று கொண்டிருந்தது. இதனை பார்த்த பகுதி இளைஞர்கள் அந்த வாகனத்தை நிறுத்த முயன்றனர்.  

ஆனால் டிரைவர் நிறுத்தாமல் வாகனத்தை வேகமாக எடுத்துச் சென்றார். உடனே இளைஞர்கள் துரத்தி சென்று கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டம் பகுதியில் வைத்து அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து திரண்ட பொதுமக்கள் அந்த வாகனத்தை சுற்றி வளைத்து சிறை பிடித்தனர்.

தொடர் விசாரணையில்,   இறைச்சி கழிவுகள் கேரள மாநிலத்தில் மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கூடங்குளம் பகுதிக்கு கொண்டு செல்வதாக தெரிய வந்தது. இதையடுத்து கிள்ளியூர் பேரூராட்சி சார்பில் இறைச்சி கழிவு ஏற்றி வந்த வாகனத்திற்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து வாகனம் கருங்கல் போலீசில் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி