முன்னாள்
பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி ஜோதி யாத்ரா கடந்த 32 ஆண்டுகளாக தொடர்ந்து பெங்களூரில் இருந்து துவங்கி ஞீபெரும்புதூர் ராஜிவ் காந்தி நினைவிடத்திற்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இவ்வாண்டைய யாத்திரை நாகர்கோவிலுக்கு இன்று(18. 5. 2023) வந்தது.
ராஜிவ் காந்தி ஜோதி யாத்ரா குழுவினரை நாகர்கோவில் டதி பள்ளி அருகில் உள்ள ராஜீவ் சிலை அருகில் வைத்து மாநகர மாவட்ட
காங்கிரஸ் தலைவர் நவீன் குமார் தலைமையில் வரவேற்பு வழங்கப்பட்டது.
காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொது செயலாளர் ஆர். எஸ். ராஜன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் வக்கீல் ராதாகிருஷ்ணன், சிவபரபு, மணிகண்டன், ஸ்டிபன், கவுன்சிலர் பால் அகிரா, அழகேசன், ஜெயசிங் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.