குமரி மாவட்டத்தில் இருந்து கடற்கரைகளில் காணப்படும் ஆரிய வகை மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து இரயுமன்துறையில் நேற்று (செப்.,25) மாலை கண்டன பேரணி நடந்தது. பேரணிக்கு பங்கு பணியாளர் அருட்பணி சூசை ஆண்டனி தலைமை வைத்தார். பங்கு பேரவை உறுப்பினர் இரயுமன்சாகர், துணை தலைவர் விஜயன் முன்னிலை வகித்தனர். இந்த பேரணியானது இரயுமன்துறை அந்தோனியார் குருசடியிலிருந்து புறப்பட்டு குழந்தை தெரசா குருசடி வரை சென்றது.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள். பேரணி முடிந்த பிறகு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பூத்துறை ஜமாத் துணைத் தலைவர் அப்துல் ரகுமான், கோட்டாறு மறை மாவட்ட இளைஞர் இயக்கம் அருள்பணியாளர் சைமன் உட்பட சமூக செயல்பாட்டாளர் சுப. உதயகுமார் உட்பட பலர் பேசினார்கள்.