புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி செம்மண் கடத்துவதாக எழுந்த புகாரின் பேரில், புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் நேற்று (பிப்.3) புதுக்கடை அருகே பனிச்சாங்கோடு பகுதியில் குற்ற தடுப்பு சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அரசு அனுமதியில்லாமல் டிப்பர் டெம்போ வாகனத்தில் செம்மண் கொண்டு வரப்பட்டது. போலீசாரை கண்டவுடன் சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு டிரைவர் ஓடிவிட்டார். போலீசார் செம்மண்ணுடன் வாகனத்தை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.