ஓடையில் செப்டிக் டேங்க் கழிவுகளை கொட்டிய வாகனத்திற்கு அபராதம்

186பார்த்தது
ஓடையில் செப்டிக் டேங்க் கழிவுகளை கொட்டிய வாகனத்திற்கு அபராதம்
நாகர்கோவில் பகுதியில் கழிவு நீர் ஓடைகளில் செப்டிக் டேங்க் கழிவுகளை கொட்டுவதாக புகார் உள்ளது. இதையடுத்து கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் மாநகராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கழிவு நீர் ஓடையில் வாகனம் ஒன்று செப்டிக் டேங்க் கழிவுகளை கொட்டியது.
இது கண்காணிப்பு காமிரா காட்சிகள் மூலம் தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனத்தை கண்டு பிடித்த அதிகாரிகள் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி