பத்துகாணி: அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ் மாயம்

73பார்த்தது
பத்துகாணி: அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ் மாயம்
குமரி மலையோர கிராமமான பத்துகாணியில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் பல்வேறு நோய்களுக்குச் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இங்கு அவசர உயர் சிகிச்சைக்கு மிகப்பெரிய மருத்துவமனைகளுக்கு நோயாளிகளைக் கொண்டுசெல்ல 108 ஆம்புலன்ஸ் சேவை இல்லாமல் இருந்தது. 

இதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வாகனம் வழங்க மலைவாழ் மக்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. பின்னர் மருத்துவமனைக்கு ஒரு 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஒதுக்கப்பட்டு மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. 

இந்நிலையில் அந்த ஆம்புலன்ஸ் தற்போது இரவோடு இரவாகத் திடீரென மாயமாகியுள்ளது. மலைவாழ் மக்களின் பல வருட போராட்டத்திற்குப் பின் வந்த 108 சேவையானது இரவோடு இரவு மாயமானது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி