நித்திரவிளை: மஸ்ஜித் ஜமா அத் மாநில துணை தலைவர் தேர்வு

77பார்த்தது
நித்திரவிளை: மஸ்ஜித் ஜமா அத் மாநில துணை தலைவர் தேர்வு
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் எம் ஏ கான். இவர் குமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் மதுரை வில்லாபுரம் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவரும் தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினருமான அல்ஹாஜ் எம் முகமது பஷீர் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் எம் ஏ கான் தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு மாநில துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில பொறுப்பில் தேர்வு செய்யப்பட்ட எம் ஏ கானை குமரி மாவட்ட முஸ்லிம் நிர்வாகிகள் உட்பட அனைத்து தரப்பினரும் பாராட்டினார்கள்.

தொடர்புடைய செய்தி