தமிழ்நாடு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தேசிய அளவிலான 2024 - 25 ஆம் ஆண்டுக்கான யோகா ஒலிம்பியாட் போட்டிகள் ஜூன் 18 முதல் 20 ஆம் தேதி வரை கர்நாடக மாநிலம் மைசூரில் ரீஜனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எஜுகேஷன் நிறுவனத்தில் நடத்தப்படுகிறது.
இது தொடர்பாக யோகா ஒலிம்பியாட் தேர்வு போட்டிகள் வட்டார அளவில் நாளை 8- ம் தேதி, மாவட்ட அளவில் 18 ஆம் தேதியும், மாநில அளவில் மதுரை மாவட்டத்தில் 14ஆம் தேதியும் நடத்தப்பட வேண்டும்.
10 முதல் 14 வரை நடுநிலை பிரிவில் பெண்கள் நான்கு பேரும் ஆண்கள் நான்கு பேரும் , 14 வயது முதல் 16 வயது வரை பெண்கள் நான்கு பேரும் ஆண்கள் நான்கு பேரும் என மொத்தம் 16 பேர் செய்யப்பட உள்ளனர்.
மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டவர்கள் போட்டியில் கலந்து கொண்டு அனைத்து பிரிவுகளின் படி தெரிவு செய்யப்படும் மாணவர்கள் தேசிய அளவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
என தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குனர் கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலமுக்கு அனுப்பி உள்ள சுற்று அறிக்கையில் கூறியுள்ளார்.