மிடாலம் ஊராட்சிக்குட்பட்ட 7-ம் வார்டில் பறம்பு குளம் உள்ளது. ஒரு ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட இந்த குளத்தை அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வந்தனர். மேலும் விவசாய நிலங்களும் பயன் பெற்று வருகிறது. தற்போது பாசிகள் அகற்றப் படாமல் குளம் பயனற்ற நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில் இன்று அப்பகுதி இளைஞர்கள் ராபின், போஸ், நித்தின், அரிசந்திரன் தலைமையில் இளைஞர்கள் ஏராளம் பேர் பாசிகளை அகற்றி, குளத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இதை பொதுமக்கள் பாராட்டினர்.