ஈத்தாமொழியில் சிவா மருத்துவமனை தொடங்கப்பட்டு 15 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், ஏழைகளுக்கு இலவச மருத்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற திட்டத்தின் தொடக்கமாக இலவச மருத்துவ ஆலோசனை பிரிவு தொடக்கப் பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா நேற்று மாலை நடைபெற்றது. அகில இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் விஜயகுமார் அனைவரையும் வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சிக்கு சிவா மருத்துவமனை தலைவர் டாக்டர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.
பொது மருத்துவர் டாக்டர் சவுமியா அனைவரையும் வரவேற்றார். தமிழக
முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், - சைக்கிள் ஓட்டும் போதே நான் ஹெல்மெட் அணிந்து ஓட்டுகின்றேன். ஆனால் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் ஹெல்மெட் அணிய வில்லை. அவர்களுக்கு என்ன ஆனாலும் கவலையில்லை. இவர்கள் செயல் தற்கொலை படைகளுக்கு சமம். மனதில் மகிழ்ச்சி இல்லாத நாடு பட்டியலில் இந்தியா 136 இடத்தில் உள்ளது. பொதுவான மனமகிழ்ச்சி இந்தியாவில் இல்லை என்பதே உண்மை. ஆனால் வெளிநாடுகளில் மனமகிழச்சியோடு இருக்கின்றனர். என பேசினார்.