குமரி: அருவிக்கரை அருவிப்பகுதி மேம்படுத்தப்படுமா?

63பார்த்தது
திருவட்டாறு அருகே பரளியாற்றுப்பகுதியில் பரந்து விரிந்து காணப்படுவது அருவிக்கரை. ஏற்ற இறக்கம் நிறைந்த பாறைகளினூடே பரளியாற்றுத்தண்ணீர் பரிந்து விரிந்து பாய்வைக்காணும் போதே மனதை சிலிர்க்க வைக்கும்.
ஆற்றையொட்டியுள்ள சப்தமாதர் கோயில் அருகில் நெடும்போக்கு கயம் உள்ளது பெயருக்கு ஏற்றார் போல் ஆழம் மிகுந்த பகுதியாகும். சப்தமாதர் கோயில் எதிரில் அருவிக்கரை மினி அருவி உள்ளது. அருவியின் ஒரு ஓரத்தில் கற்களில் கடவுள்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு மேற்குத்தொடர்ச்சி மலை அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகம் மூலமாக அருவிக்கரையின் அணையையொட்டி சிறுவர் பூங்கா, பல்வேறு உபகரணங்களுடன் அமைக்கப்பட்டது. இன்றைக்கு அந்த இடம் புல் பூண்டுகள் முளைத்து புதராகக் காட்சி தருகிறது. அங்கு செல்லவே முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது. மேலும் விளயாட்டு உபகரணங்களும் சேதமடைந்துள்ளது. அதே திட்டத்தில் அருவிக்கரையில் சுற்றுலாவருபர்கள் பயன்படுத்த போடப்பட்டிருந்த பைபர் படகுகளும் இன்று காணாமல் போய்விட்டது.
இங்கு பாதை வசதி, அருவியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாத்தூர் தொட்டிப்பாலத்தின் கீழ் பகுதியில் ஓடும் ஆற்றில் இருந்து சப்தமாதர் கோயில் வரையுள்ள பகுதியில் ரோப்கார் வசதி போன்றவை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி