குமரி: வேளாண்மை அலுவலருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை

52பார்த்தது
குமரி: வேளாண்மை அலுவலருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை
நாகர்கோவிலை சேர்ந்தவர்  ஜாஸ்மின் லதா. கடந்த   2011 -ம் ஆண்டு    நாகர்கோவிலில் இணை வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில் வேளாண்மை அலுவலராக பணிபுரிந்த போது, விவசாயிகளை சுற்றுலா அழைத்து செல்வதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை அப்போது முறைகேடாக போலியான வாகன எண்களை பயன்படுத்தி சுற்றுலா அழைத்து சென்றதாக கூறி இரண்டு லட்சத்து 24 ஆயிரத்து 520 ரூபாய் கையாடல் செய்ததாக அப்போது கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவில் ஆய்வாளராக பணிபுரிந்த  ஹெக்டர் தர்மராஜ் அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு ரிப்போர்ட் அனுப்பி இருந்தார்.
      அந்த ரிப்போர்ட் அடிப்படையில் மேல் இடத்தில் இருந்து வழக்கு பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவின் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது..   இந்த வழக்கு  கன்னியாகுமரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்து.  
    அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் அரசு பணத்தை கையாடல் செய்த குற்றச்சாட்டின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை தற்போது வழங்கப்பட்டுள்ளது.
     நாகர்கோவிலை சேர்ந்த ஜாஸ்மின் லதா. இவர்  நாங்குநேரியில் உதவி வேளாண்மை இயக்குனராக பணிபுரிந்து கடந்த மாதம் ஓய்வு பெற இருந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி