குளச்சல் களிமார் விளையாட்டு நற்பணி இயக்கமும், கன்னியாகுமரி மாவட்ட பளுதூக்கும் சங்கமும் G.R.I. ஜிம் இணைந்து மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டியை நடத்தியது. குளச்சலில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களின் பளுதூக்கும் போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றன. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த போட்டிகளின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் பரிசுகள் வழங்கினார்.