கொல்லங்கோடு: ஏடிஎம் உடைத்து திருட முயன்றவர் கைது

72பார்த்தது
கொல்லங்கோடு: ஏடிஎம்  உடைத்து திருட முயன்றவர் கைது
கொல்லங்கோடு காவல் நிலையத்திற்கு அருகே உள்ள கனரா வங்கி ஏடிஎம் இயந்திரத்தை நேற்று முன்தினம் (ஜூன் 3) இரவில் மர்ம ஆசாமி உடைத்து திருட முயன்றார். இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபர் குறித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் திருட முயன்றவர் கொல்லங்கோடு அருகே சிலுவைபுரம் பகுதியை சேர்ந்த ஜோபின் (25) என்ற வாலிபர் என்பது தெரிய வந்தது. போலீசார் நேற்று மாலை ஜோபினை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஜோபின் திருமணமானவர் என்றும், பல லட்ச ரூபாய் கடன் இருந்ததால் ஏடிஎம்மை கொள்ளையடித்து கடனை அடைக்கும் எண்ணத்தில் ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயற்சி செய்ததாக தெரிவித்துள்ளார். 

மேலும் இவர் மீது காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளதாக தெரிகிறது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி