கொல்லங்கோடு: தொழிலதிபர் மர்ம சாவு; போலீசில் புகார்

57பார்த்தது
கொல்லங்கோடு:  தொழிலதிபர் மர்ம சாவு; போலீசில் புகார்
கொல்லங்கோடு அருகே தேவன்சேரி பகுதியை சேர்ந்தவர் கமலன் (65). இவர் பஹ்ரைன் நாட்டில் பேப்ரிகேஷன் தொழிற்சாலை வைத்து தொழில் செய்து வந்தார். பின்னர் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மும்பையில் வசித்து வந்துள்ளார். 

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்து அவர் ஒரு பங்களாவில் தன்னந்தனியாக வசித்து வந்தார். மனைவி மற்றும் பிள்ளைகள் மும்பையில் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி கமலன் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த வீட்டுப் பணிப்பெண் அக்கம் பக்கத்தில் கூறி திருவனந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். நேற்று முன்தினம் இரவு கமலன் உயிரிழந்தார். தலைக்குள் ரத்தம் உறைந்த நிலையில் காயம் காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 7-ம் தேதி இரவு மும்பையில் இருந்து இரண்டு பேர் வந்துள்ளனர். 

சம்பவம் நடந்த அன்று இரவு உள்ளூரில் இருந்து சிலர் அவர்கள் வீட்டில் இருந்துள்ளனர். இதனால் அவரது சார்பில் மர்மம் இருப்பதாக கமலன் மனைவி விக்டோரியா என்பவர் கொல்லங்கோடு போலீஸில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து, கமலன் உடலை தனியார் மருத்துவமனையில் இருந்து குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனைக்குப் பின் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி