அங்கன்வாடி மையத்தில் கத்தியுடன் புகுந்த ரவுடி கைது

1085பார்த்தது
அங்கன்வாடி மையத்தில் கத்தியுடன் புகுந்த ரவுடி கைது
நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரம் பகுதியை  சேர்ந்தவர் சுனிதா குமாரி (39). இவர் வாவறை பகுதியில் உள்ள ஒரு அங்கன்வாடியில் ஆசிரியையாக உள்ளார். நேற்று (08.06.2024) மதியம் சுனிதா குமாரி அங்கன்வாடி மையத்தில் பணியில் இருந்த போது, வாவறை பகுதியை  சேர்ந்த ஜஸ்டின் ராஜ் (47) என்பவர் கத்தியுடன் அங்கன்வாடி மையத்தில் புகுந்து சுனிதா குமாரியின் கையை பிடித்து, சேலையை இழுத்து அட்டகாசம் செய்துள்ளார்.

இதை பார்த்த உதவியாளர் கிரிஜா ஓடி வரவே அவரையும் ஜஸ்டின் தாக்கி விட்டு கத்திய காட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக தெரிகிறது. இது சம்பந்தமாக அங்கன்வாடி  ஆசிரியை சுனிதா குமாரி நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜஸ்டின் ராஜ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். ஜஸ்டின் ராஜ் ஏற்கனவே ரவுடி பட்டியலில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி