கிள்ளியூர்: ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து

75பார்த்தது
கிள்ளியூர்: ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் இன்று வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து: - கடந்த 2024 - ஆண்டு நாம் சந்தித்த சவால்கள் ஏராளம். மக்கள் சேவைக்கு விடப்பட்ட சவால்களை நாம் எதிர்கொண்டு, சாதனைகள் செய்துகொண்டிருக்கிறோம். அதுபோல் கடந்த ஆண்டுகளில் வாழ்க்கையில் நடைபெற்ற தீயவைகளை மறந்து நல்லவற்றை மட்டும் மனதில் கொண்டு மகிழ்ச்சியோடு 2025ம் ஆண்டில் பயணிப்போம். 

மேலும் புதிய 2025ம் ஆண்டு பிரகாசமும், நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும். நிறைந்த வளம், நிறைந்த ஆரோக்கியம், மிகுந்த சந்தோஷம், மகிழ்ச்சியையும் வெற்றிகளையும் பெருக்கும் ஆண்டாக அமைய வேண்டும். புதிய சிந்தனையுடன் நாட்டின் நலன் காக்க வளமான தமிழகத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம். 2025ம் இப்புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும், மகிழ்வும் இன்பம் பிறக்கும் ஆண்டாக பெருகிடவும், மக்கள் நினைத்தால் உலகில் எதையும் சாதிக்க முடியும். 

உத்வேகத்தோடும், உற்சாகத்தோடும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி