கருங்கல்: செம்மண் கடத்தல்; டெம்போ, பொக்லைன் பறிமுதல்

50பார்த்தது
கருங்கல்: செம்மண் கடத்தல்; டெம்போ, பொக்லைன் பறிமுதல்
கருங்கல் அருகே தெருவுகடை பகுதியில் இரவு நேரங்களில் உரிய அனுமதி இன்றியும் சட்ட விரோதமாகவும் செம்மண் கடத்துவதாக கருங்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் நேற்று இரவு அந்த பகுதியை சோதனையிட்டனர். அப்போது அங்கு சிலர் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அள்ளி டெம்போவில் ஏற்றிக் கொண்டு இருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதை அடுத்து போலீசார் அங்கு சென்று செம்மண் பாரத்துடன் என்ற டெம்போ மற்றும் ஒரு பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி