கருங்கல்: குளத்தில் மண் கடத்தல் தட்டிகேட்டதால் கொலை மிரட்டல்

80பார்த்தது
கருங்கல்: குளத்தில் மண் கடத்தல் தட்டிகேட்டதால் கொலை மிரட்டல்
கருங்கல் அருகே நடுத்தேரி என்ற பகுதியில் பிசினிகுளம் உள்ளது. இந்த குளத்தில் இருந்து விவசாய தேவைகளுக்கு வண்டல் மண் எடுக்க வட்டாட்சியர் பரிந்துரையின் பேரில் கிள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அனுமதி வழங்கியுள்ளார். 

மொத்தம் 1553 கன மீட்டர் மண்ணெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் மண் எடுப்பதாகவும், விவசாய தேவை தவிர மாற்று தேவைகளுக்கு மண் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது. 

இதை அடுத்து மிடாலம் பட்டணங்கள் நீரினை பயன்படுத்தும் சங்க தலைவர் கோபால் மற்றும் கீழ் மிடால் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் துரைராஜ் உள்ளிட்டவர்கள் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். 

அப்போது மண் எடுத்துக் கொண்டிருந்த கும்பல் அவர்களை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து நீரினை பயன்படுத்தும் சங்க தலைவர் கோபால் கருங்கல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி