காஞ்சிரகோடு: தாயை தாக்கிய மகள் மருமகன் மீது வழக்கு

71பார்த்தது
காஞ்சிரகோடு: தாயை தாக்கிய மகள் மருமகன் மீது வழக்கு
காஞ்சிரகோடு அருகே உள்ள சாங்கை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி சரசம் (64). இந்த தம்பதிக்கு விஜயகுமாரி (40) என்ற மகள் உள்ளார். இவரது கணவர் ஜெகன் (42). விவசாயி. சரசம் தனது பெயரில் உள்ள சொத்துக்களை மகளுடைய பிள்ளைகளின் பெயரில் எழுதி வைத்துள்ளார். இது குறித்து தாயாரிடம் விஜயகுமாரி அடிக்கடி கேட்டு பிரச்சினை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவ தினம் விஜயகுமாரியும் ஜெகனும் சேர்ந்து தகராறு செய்து, இருவரும் சேர்ந்து சரசத்தை சரமரியாக தாக்கி, வெட்டு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். சரசம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் விஜயகுமாரி மற்றும் மருமகன் ஜெகன் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி