களியக்காவிளை: செம்மண் கடத்தி வந்த டெம்போ பறிமுதல்

52பார்த்தது
களியக்காவிளை: செம்மண் கடத்தி வந்த டெம்போ பறிமுதல்
களியக்காவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் பளுகல் பகுதியில் இன்று (25-ம் தேதி) காலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக டெம்போ ஒன்று வந்தது. நிறுத்தும்படி போலீசார் கை காட்டினர். ஆனால் அந்த டெம்போ நிற்காமல் சென்றது. தொடர்ந்து போலீசார் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று இளஞ்சிறை என்ற பகுதியில் டெம்போவை மடக்கி பிடித்தனர். 

மேலும் தப்பியோட முயன்ற டிரைவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் விசாரணை செய்த போது தேவிகோடு பகுதி ஜியோ ஜார்ஜ் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து வாகனத்தை சோதனையிட்ட போது, அதில் கேரளாவில் இருந்து போலி பாஸ் மூலம் மண் கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. தொடர்ந்து ஜியோ ஜார்ஜை கைது செய்த போலீசார் பறிமுதல் செய்து போலீசார் வாகனத்தையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி