புதுக்கடை அருகே பைங்குளம், குரங்கனார்விளை மகாதேவர் கோவில் நுழைவு வாயில் திறப்பு விழா ஆலய தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்தது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொறுப்பாளரும், பைங்குளம் ஊராட்சியின் முன்னாள் தலைவருமான சந்திரகுமார் நுழைவாயிலை திறந்து வைத்தார். நிகழ்வில் பைங்குளம் ஊராட்சி தலைவர் விஜயராணி , முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலயமேல்சாந்தி ஸ்ரீனிவாசன் போற்றி, ராஜேஷ், கண்ணன், ராதாகிருஷ்ணன், ராஜகுமார் விஜயகுமார் , உட்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்