இனயம் கடற்கரை கிராமத்தில் மீனவர் வளர்ச்சி இயக்க கூட்டம்

54பார்த்தது
இனயம் கடற்கரை கிராமத்தில் மீனவர் வளர்ச்சி இயக்க கூட்டம்
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இனயம் கடலோர மீனவ கிராமத்தில்  அகில இந்திய மீனவர் மக்கள் வளர்ச்சி இயக்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.  

     நிகழ்ச்சியில்  குமரி மாவட்ட மீன் விவசாயிகள் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க  சேர்மனும், தமிழக பா. ஜ. க மீனவர் பிரிவு மாநில செயலாளர் & பெருங்கோட்ட பொறுப்பாளரும், அகில இந்திய மீனவர் மக்கள் வளர்ச்சி இயக்கத்தின்  நிறுவனர் - தலைவருமான E. S. சகாயம் தலைமை வகித்தார்.  

     கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழியாக வழங்கப்படும் வள்ளங்களுக்கான மானிய மண்ணெண்ணெய், மானிய என்ஜின் பெறுவது குறித்தும், 𝗣𝗠𝗠𝗦𝗬 திட்டத்தின் கீழ் ரூபாய் 2 லட்சம் மானியத்துடன் கூடிய மானிய வள்ளங்கள் பெறுவது தொடர்பாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.   கூட்டத்தில் அமைப்பின் இனயம் கடலோர மீனவ கிராம மாவட்ட மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி