ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய மீன் தொழிலாளர் யூனியன்

869பார்த்தது
ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய மீன் தொழிலாளர் யூனியன்
தமிழ்நாடு மீன்தொழிலாளர் யூனியன் கருங்கல் கிளை சார்பில், சாலையோரங்களில் ஆதரவற்று திரியும் மக்களை தேடிப்பிடித்து மதிய உணவு வழங்கும் பணி துவங்கியது. நிகழ்ச்சியை அரசு போக்குவரத்து கழக காமராஜ் நாடார் தொழிற்சங்க பொதுச்செயலாளர் ராயப்பன் துவக்கி வைத்தார். கருங்கல், குளச்சல், திக்கணங்கோடு பகுதிகளில் உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கிளைத்தலைவர் கருங்கல் அலக்சாண்டர் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் சந்தோஷ்குமார், துணைத்தலைவர் சேவியர், துணைச்செயலாளர் சுரேஷ், ஆலோசகர் ரமேஷ், பர்ணபாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த உணவு வழங்கும் நிகழ்ச்சி முதல் முயற்சியாக தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடத்துவதாகவும், பின்னர் தினமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என யூனியன் கிளை தலைவர் கருங்கல் அலக்சாண்டர் தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி