புதுக்கடை அருகே விழுந்தயம்பலம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (70). இவர் சம்பவ தினம் மாலையில் தனது பைக்கில் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சுந்தரத்தின் பைக்கில் மோதி தள்ளி விட்டு, நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சுந்தரத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்கு அனுமதித்துள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.