காங்கிரஸ் நிர்வாகி கொலை: 3 எம் எல் ஏ க்கள் சாலை மறியல்

71பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மூவாற்றுமுகம் பகுதியை சேர்ந்தவர் ஜாக்சன். திருவட்டார் நகர இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவராக இருந்தவர். இவரது மனைவி உஷா குமாரி. இவர் காங்கிரஸ் கட்சியின் திருவட்டார் பத்தாவது வார்டு கவுன்சிலராக உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு முன் விரோதம் காரணமாக ஆறு பேர் கொண்ட கும்பல் ஜாக்சனை படுகொலை செய்தது. தலைமறைவான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் மற்றும் ஜாக்சனின் உறவினர்கள் திருவட்டார் காவல் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எம் பி விஜய் வசந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என காவல்துறையினரை வலியுறுத்தி வந்த நிலையில்,
உண்மை குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக நேற்று அறிவித்தனர். இது தொடர்ந்து திருவட்டார் சந்திப்பில் இன்று மாலை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், தாரகை கன்பட் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர், ஜாக்சனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக வந்த அரசு பேருந்துகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இரண்டு மணி நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் அனைவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி