குமரியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு  பாராட்டு சான்று

84பார்த்தது
குமரியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு  பாராட்டு சான்று
நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் இன்று 07. 06. 2024 ம் தேதி மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கன்னியாகுமரி  மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
     இக்கூட்டத்தில், ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.

    கொலை வழக்குகள், வழிப்பறி குற்றவாளிகள், இரவு மற்றும் பகல் கன்னகளவு குற்றவாளிகள், போக்கிரிகள் மற்றும் திட்டமிட்டு செயல்படும் குற்றவாளிகள் ஆகியோர்களை தொடர்ந்து கண்காணித்து முறையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
  குமரியில் மாண்புமிகு பாரத பிரதமர் பாதுகாப்பு பணியில்  சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள், பல்வேறு குற்ற வழக்கு மற்றும் கஞ்சா வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்ய சிறப்பாக பணியாற்றிய தனிப்படை காவலர்கள்  , குற்ற வழக்குகளை விரைவில் நீதிமன்ற விசாரணை முடித்து   குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர  உதவியாக இருந்த கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், அரசு உதவி வழக்கறிஞர்கள் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சான்றிழ்கள் வழங்கி பாராட்டினார்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி