பத்துகாணி: தொடர் மின் தடையால் செல்போன் டவர்கள் செயலிழந்தன

84பார்த்தது
குமரி மாவட்டத்தில் தற்போது பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழையுடன் காற்றும் பலமாக வீசி வருவதால் மின் பாதைகளில் மரங்கள் முறிந்தும், முறையான பராமரிப்பு இல்லாமல் ஏற்படும் பழுது காரணமாகவும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மலைகிராமங்களான ஆறுகாணி, பத்துகாணி, கடையாலுமூடு, ஆலஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடை காரணமாக செல்போன் டவர்கள் செயலிழந்து விடுகிறது. இதனால் அவசர தேவைக்கு யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு அப்பகுதிமக்கள் இருந்துவருகின்றனர். நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வாகனத்தை கூட தொடர்பு கொள்ளமுடியாத நிலை உள்ளது. குறிப்பாக பேச்சிப்பாறை துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் களியல், குலசேகரம் மின் அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பெரும்பாலான நேரங்களில் மின் விநியோகம் இல்லாத நிலையே காணப்படுகிறது. மின் தடை காரணமாக மக்கள் பெரிதும் அவதிப்படும் நிலையில், செல்போன்களை அவசர தேவைக்கு கூட பயன்படுத்த முடியாமல் திற்பரப்பு சுற்றுவட்டார பி. எஸ். என். எல் வாடிக்கையாளர்கள் அவதிப்படுகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி