நித்திரவிளை அருகே பள்ளிக்கல் பகுதியை சேர்ந்தவர் பிளாரி ஜெபராஜ் (70) இவரது கணவர் ஜெபராஜ் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். நேற்று இரண்டு மகன்கள் வெளிநாட்டில் உள்ளனர்.
நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் பிளாரி ஜெபராஜ் வீட்டு மாடியில் துணி காய போட்டு விட்டு கீழே இறங்கி வந்து பார்த்த போது, பின்பக்க கதவு திறந்து காணப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்தவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது.
மேலும் அந்த பீரோவில் இருந்த ஆறு ஜோடி கம்மல் ஒரு செயின் என்று 28 கிராம் நகையும், பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் காணவில்லை. இது தொடர்பாக பிளாரி ஜெபராஜ் நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த வில்சன் மகன் அனீஸ் (22) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருடி சென்று தெரிய வந்தது. பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் இருந்த திருட்டு நகைகளை மீட்டனர்.
அனீஸ் மீது ஏற்கனவே நித்திரவிளை, புதுக்கடை, கருங்கல், கொல்லங்கோடு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது.