திற்பரப்பு அருவி பகுதியில் மிரண்டு ஓடிய யானை - பரபரப்பு

76பார்த்தது
திற்பரப்பு அருவி பகுதியில் தனி நபர் ஒருவர் யானை வளர்த்து வருகிறார். இந்த  யானைகளை அருவியின் தடுப்பணை மேல் பகுதியில் பாகன்கள் கொண்டு சென்று குளிப்பாட்டி வருகின்றனர். யானைகள் குளிக்கும் இடத்தில் கழிவுநீர் தேங்கி அருவியில் குளிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு நோய் தொற்று ஏற்படுவதாக பலமுறை திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகத்திடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்த நிலையில் இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை.  

       இந்த நிலையில் விடுமுறை தினமான இன்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்த நேரத்தில், அருவியில் குளிப்பாட்ட கொண்டு வந்த  அந்தப் பகுதியில் உள்ள யானை ஒன்று  மிரண்டு ஓடி உள்ளது. இதனால் எதிரே வந்த சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு தற்காப்புக்காக ஓடி உள்ளனர். இதில் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

      பாதுகாப்பற்ற முறையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நிறைந்த இடத்தில் இதுபோன்ற யானைகளை கொண்டு வருவதை தடை செய்ய வேண்டும் என்றும், குறிப்பாக திற்பரப்பு அருவியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் யானைகள் குளிப்பதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் எனவும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி